தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா - பரிசோதனை

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 892 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

By

Published : Jul 8, 2021, 12:08 PM IST

இந்தியாவில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த தினசரி கரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கரோனா நிலவரம்

தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 892 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கரோனாவினால் மொத்தப் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே ஏழு லட்சத்து ஒன்பதாயிரத்து 557ஆக அதிகரித்துள்ளது. தற்போது நான்கு லட்சத்து 60 ஆயிரத்து 704 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று 817 பேர் கரோனாவால் உயிரிழந்த நிலையில், நாட்டின் மொத்த கரோனா இறப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்து ஐந்தாயிரத்து 28ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 44 ஆயிரத்து 291 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பரிசோதனை, தடுப்பூசி நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை (ஜூலை 7) ஆம் தேதி வரை நாட்டில் 42 கோடியே 52 லட்சத்து 25 ஆயிரத்து 897 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில் நேற்று மட்டும் 18 லட்சத்து 93 ஆயிரத்து 800 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இதுவரை 36 கோடியே 48 லட்சத்து 47ஆயிரத்து 549 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:இந்தியாவில் லாம்டா கரோனா பரவல்? - நிபுணர் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details