இந்தியாவில் நேற்று (ஜூன்.23) ஒரேநாளில் 54 ஆயிரத்து 69 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதித்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 82 ஆயிரத்து 778ஆக அதிகரித்துள்ளது.
68,885 பேர் டிஸ்சார்ஜ்
கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 68 ஆயிரத்து 885 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியே 90 லட்சத்து 63 ஆயிரத்து 740ஆக உள்ளது.
1,321 பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 321 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 91 ஆயிரத்து 981ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 30 கோடியே 16 லட்சத்து 26 ஆயிரத்து 28 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
முதலிடத்தில் கேரளா
கேரளா மாநிலத்தில் கரோனா பாதிப்பு மற்ற மாநிலங்களைவிட அதிகமாக உள்ளது. அதன்படி நேற்று (ஜூன்.23) கேரளாவில் 12 ஆயிரத்து 787 பேருக்குத் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இதையும் படிங்க:டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் தீம் பாடல் வெளியானது!