தினசரி கரோனா பாதிப்பு நிலவரத்தை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (ஜூலை 9) வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43 ஆயிரத்து 393 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நாட்டின் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை மூன்று கோடியே ஏழு லட்சத்து 52 ஆயிரத்து 950ஆக அதிகரித்துள்ளது. தற்போது நான்கு லட்சத்து 58 ஆயிரத்து 727 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று 911 பேர் கரோனாவால் உயிரிழந்த நிலையில், நாட்டின் மொத்த கரோனா இறப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்து ஐந்தாயிரத்து 939 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 44 ஆயிரத்து 459 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.