இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரத்து 640 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 99 லட்சத்து 77 ஆயிரத்து 861 ஆக உள்ளது. 91 நாள்களுக்குப் பிறகு தினசரி தொற்று 42 ஆயிரம் ஆகக் குறைந்துள்ளது.
கேரளா முதலிடம்
குறிப்பாக கேரளாவில் நேற்று (ஜூன் 21) ஒரேநாளில் ஏழாயிரத்து 449 பேருக்குத் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட அதிகமாகும்.
அடுத்தபடியாக தமிழ்நாடு மாநிலம் உள்ளது. அங்கு, ஏழாயிரத்து 427 பேருக்குத் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
1,167 பேர் உயிரிழப்பு
நேற்று (ஜூன் 21) மட்டும் 1,167 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை மூன்று லட்சத்து 89 ஆயிரத்து 302 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இரண்டு கோடியே 89 லட்சத்து 26 ஆயிரத்து 38 ஆக உள்ளது. தற்போது ஆறு லட்சத்து 62 ஆயிரத்து 521 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
தடுப்பூசியில் உலக சாதனை
இதுவரை, மொத்தம் 28 கோடியே 87 லட்சத்து 66 ஆயிரத்து 201 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று (ஜூன் 21) ஒரேநாளில் 85 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தி இந்தியா உலக சாதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஒரேநாளில் 85 லட்சம் பேருக்கு தடுப்பூசி: இந்தியா உலக சாதனை!