தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் மேலும் 41,195 நபர்களுக்கு கரோனா - கோவிட்- 19 பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 490 நபர்கள் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா
இந்தியாவில் கரோனா

By

Published : Aug 12, 2021, 11:34 AM IST

நாட்டின் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரத்து 195 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவிட்-19 நிலவரம்

நாட்டில் இதுவரை மூன்று கோடியே 20 லட்சத்து 77 ஆயிரத்து 706 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மூன்று லட்சத்து 87 ஆயிரத்து 987 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 490 நபர்கள் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்து 29 ஆயிரத்து 669ஆக உள்ளது.

39 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்

நேற்று (ஆக.11) மட்டும் 39 ஆயிரத்து 69 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பிய நிலையில், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை மூன்று கோடியே 12 லட்சத்து 60 ஆயிரத்து 50ஆக உயர்ந்துள்ளது.

தடுப்பூசி செலுத்தப்பட்டோர்

இந்தியாவில் இதுவரை 52 கோடியே 36 லட்சத்து 71 ஆயிரத்து 19 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:முடங்கின காங்கிரஸ் தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள்

ABOUT THE AUTHOR

...view details