இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 36 ஆயிரத்து 83 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால் பாதித்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 21 லட்சத்து 92 ஆயிரம் 576 ஆக அதிகரித்துள்ளது.
2 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்
நேற்று (ஆக.14) ஒரேநாளில் 37 ஆயிரத்து 927 பேர் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 13 லட்சத்து 76 ஆயிரத்து 15 ஆகப் பதிவாகியுள்ளது. மூன்று லட்சத்து 85 ஆயிரத்து 336 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.