நாட்டில் கடந்த ஒருநாளில் 13 ஆயிரத்து 058 பேருக்குப் புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு மூன்று கோடியே 40 லட்சத்து 94 ஆயிரத்து 373 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 164 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு நான்கு லட்சத்து 52 ஆயிரத்து 454 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 118 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் 83 லட்சத்து 23 ஆயிரத்து 647 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 98 கோடியே 86 லட்சத்து 87 ஆயிரத்து 652 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.