தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவால் ஒரே நாளில் 3,890 பேர் உயிரிழப்பு!

நேற்று(மே.14) ஒரே நாளில் மூன்று லட்சத்து 26 ஆயிரத்து 98 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

COVID-19 India
இந்தியா

By

Published : May 15, 2021, 11:28 AM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து 26 ஆயிரத்து 98 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 43 லட்சத்து 72 ஆயிரத்து 907ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

நேற்று (மே.14) கரோனாவால் பாதிக்கப்பட்ட 3,890 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 66 ஆயிரத்து 207ஆக அதிகரித்துள்ளது.

தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 4 லட்சத்து 32 ஆயிரத்து 898 ஆக உள்ளது.தற்போது 36 லட்சத்து 73 ஆயிரத்து 802 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தமாக 18 கோடியே 4 லட்சத்து 57 ஆயிரத்து 579 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details