இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து 66 ஆயிரத்து 161 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 26 லட்சத்து 62 ஆயிரத்து 575ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவில் கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் ஒரே நாளில் 3,754 பேர் உயிரிழப்பு! - India tracker
நேற்று(மே.9) ஒரே நாளில் மூன்று லட்சத்து 66 ஆயிரத்து 161 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா
நேற்று (மே.9) கரோனாவால் பாதிக்கப்பட்ட 3,754 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 86 லட்சத்து 71 ஆயிரத்து 222 ஆக உள்ளது.
தற்போது 37 லட்சத்து 45 ஆயிரத்து 237 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தமாக 17 கோடியே 1 லட்சத்து 76 ஆயிரத்து 603 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.