தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மீண்டும் 45 ஆயிரத்தைக் கடந்த கரோனா எண்ணிக்கை: 3ஆவது அலைக்குத்  தயாராகிறதா இந்தியா? - இந்தியா கரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 607 பேர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

COVID-19
COVID-19

By

Published : Aug 26, 2021, 10:58 AM IST

இந்தியாவில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 164 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது கடந்த 25ஆம் தேதி பதிவான பாதிப்பை விட சுமார் 22.7 விழுக்காடு அதிகமாகும்.

இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் மொத்தமாக கரோனா தொற்றால் இதுவரை மூன்று கோடியே 25 லட்சத்து 58 ஆயிரத்து 530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மூன்று லட்சத்து 33 ஆயிரத்து 725 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று (ஆக.25) 607 பேர் கரோனாவால் உயிரிழந்த நிலையில், நாட்டின் மொத்த கரோனா இறப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்து 36 ஆயிரத்து 364ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் தொற்றிலிருந்து 34 ஆயிரத்து 159 பேர் குணமடைந்த நிலையில் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 17 லட்சத்து 88 ஆயிரத்து 440ஆக உள்ளது. இதுவரை மொத்தமாக 60 கோடியே 38 லட்சத்து 46 ஆயிரத்து 475 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 31 ஆயிரத்து 445 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஒரே நாளில் நாட்டில் மீண்டும் கரோனா பாதிப்பு 45 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில், கரோனா தொற்றிலிருந்து தங்களை காத்துக்கொள்ள மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details