டெல்லி: நாடு முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 895 பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், இதுவரை உயிரிழப்பு 4 லட்சத்து 73 ஆயிரத்து 326 ஆக உள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்பான புள்ளிவிவர அறிக்கை இன்று (டிச.5) காலை 8 மணிக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.
அதில், கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 895 பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 2 ஆயிரத்து 796 ஆக உள்ளது. இதில், அதிகப்பட்சமாக பிகார் மாநிலத்தில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.