நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 408 பேர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல், கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உள்ளது
இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடியே 8 லட்சத்து 2 ஆயிரத்து 591 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 54 ஆயிரத்து 823 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 கோடியே 4 லட்சத்து 96 ஆயிரத்து 308 ஆக உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக 2 லட்சத்துக்கும் குறைவாக தான் இருந்து வருகிறது.