தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19 நிலவரம்: இந்தியாவில் புதிதாக 12,286 பேருக்கு பாதிப்பு - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்

கடந்த 24 மணிநேரத்தில் 12 ஆயிரத்து 286 நபர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 91 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

COVID-19
கோவிட்-19 நிலவரம்

By

Published : Mar 2, 2021, 12:16 PM IST

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் (மார். 2) வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 12 ஆயிரத்து 286 நபர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 91 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

கோவிட் - 19 பாதிப்பு நிலவரம்:

இந்தியாவில், இதுவரை ஒரு கோடியே 11 லட்சத்து 24 ஆயிரத்து 527 பேர் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 358 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 248 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

நாட்டில் அதிக உயிரிழப்பைச் சந்தித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு இதுவரை 52,184 பேர் கோவிட்-19 காரணமாக உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 12,501 பேரும், கர்நாடகாவில் 12,336 பேரும், டெல்லியில் 10,911 பேரும் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை, தடுப்பூசி நிலவரம்:

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (மார். 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏழு லட்சத்து 59 ஆயிரத்து 283 நபர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை மொத்தம் 21 கோடியே 76 லட்சத்து 18 ஆயிரத்து 057 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:குடும்பத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்ட சரத் பவார்!

ABOUT THE AUTHOR

...view details