நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் (பிப். 14) வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 12 ஆயிரத்து 194 நபர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 92 பேர் கரோனா பாதிப்புக் காரணமாக உயிரிழந்தனர்.
கோவிட் - 19 பாதிப்பு நிலவரம்:
இந்தியாவில், இதுவரை ஒரு கோடியே ஒன்பது லட்சத்து 04 ஆயிரத்து 940 பேர் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 642 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 642 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.