தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாளொன்றுக்கு 10 ஆயிரத்தைக் கடக்கும் தினசரி கரோனா பாதிப்பு - கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, நாட்டில் நாளொன்றுக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 584ஆக அதிகரித்துள்ளது.

COVID-19: India records 10,584 new cases
COVID-19: India records 10,584 new cases

By

Published : Feb 23, 2021, 3:53 PM IST

டெல்லி: நாட்டில் கரோனா வைரஸின் பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, கரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தன. இந்நிலையில், கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களில் கரோனா பரவல் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டது. இதையடுத்து நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது.

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 584ஆக அதிகரித்துள்ளது. இதனால் தற்போது வரை நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சத்து 16 ஆயிரத்து 434 ஆக உள்ளது. அதேசமயத்தில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதன்படி நாட்டில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.07 கோடியாக உள்ளது.

நேற்று ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 78 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 463ஆக உள்ளது.

இதைத் தொடர்ந்து தற்போது நாட்டில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 306 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details