தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் மேலும் புதிதாக 30 ஆயிரம் பேருக்கு கரோனா: 295 பேர் மரணம் - கரோனா இன்று

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்து 256 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது கரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்றுவருவோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 18 ஆயிரத்து 181ஆக உயர்ந்துள்ளது.

COVID-19: India logs 30K fresh cases; 295 deaths
இந்தியாவில் மேலும் புதிதாக 30ஆயிரம் பேருக்கு கரோனா; 295 பேர் உயிரிழப்பு

By

Published : Sep 20, 2021, 11:15 AM IST

டெல்லி:நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 30 ஆயிரத்து 256 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 295 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் சிகிச்சைப் பெற்றுவருவோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 18 ஆயிரத்து 181 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 45 ஆயிரத்து 133ஆகவும் உயர்ந்துள்ளது.

இதுவரை கரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை மூன்று கோடியே 27 லட்சத்து 15 ஆயிரத்து 105ஐ எட்டியுள்ளது.

நேற்றுவரை 55 கோடியே 36 லட்சத்து 21 ஆயிரத்து 766 பேருக்கு கரோனா தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில், 79.58 கோடி தடுப்பூசிகள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், 5.43 கோடி தடுப்பூசிகள் தற்போது கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:பள்ளிகள் திறப்பு - 73 மாணவர்களுக்கு கரோனா தொற்று

ABOUT THE AUTHOR

...view details