இந்தியாவில் கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் பதிவாகிறது. இதனால் மக்களிடம் கரோனா மூன்றாம் அலை குறித்த அச்சம் நிலவி வருகிறது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்து 570 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் தொற்றால் 3 கோடியே 33 லட்சத்து 47 ஆயிரத்து 325ஆக உயர்ந்தது.
நேற்று (செப் 15) மட்டும் 38 ஆயிரத்து 303 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 25 லட்சத்து 60 ஆயிரத்து 474 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 431 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 43 ஆயிரத்து 928 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகக் கேரளாவில் கரோனா பதிப்புகள் அதிகமாகப் பதிவாகியுள்ளது.