இந்தியாவில் கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்து 176 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 33 லட்சத்து 16 ஆயிரத்து 755ஆக அதிகரித்துள்ளது.
38 ஆயிரம் டிஸ்சார்ஜ்
கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 12 நபர்கள் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், மொத்தமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 25 லட்சத்து 22 ஆயிரத்தை 171ஆக அதிகரித்திருக்கிறது.
284 பேர் உயிரிழப்பு
நாட்டில் நேற்று (செப்.14) மட்டும் 284 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்தனர். இதனால் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 43 ஆயிரத்து 497 நபர்களாக உயர்ந்துள்ளது. தற்போது மூன்று லட்சத்து 51 ஆயிரத்து 87 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.