இதன்மூலம் நாடு முழுவதும் இதுவரை கரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 37 லட்சத்து 66 ஆயிரத்து 707ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 28 ஆயிரத்து 178 நபர்கள் தொற்றிலிருந்து குணமடைந்தனர். நாடு முழுவதும் தொற்றிலிருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 30 லட்சத்து 43 ஆயிரத்து 144ஆக அதிகரித்தது.
கடந்த 24 மணிநேரத்தில் 277 பேர் தொற்று காரணமாக ஒரேநாளில் உயிரிழந்தனர்.இதனால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 48 ஆயிரத்து 339ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை மொத்தம் 89 கோடியே இரண்டு லட்சத்து எட்டாயிரத்து ஏழு பேருக்கு தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:செப்டம்பரில் 23% உயர்வு கண்ட ஜி.எஸ்.டி வசூல்