தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19: இந்தியாவில் ஒரேநாளில் 27,000 பேருக்கு கரோனா பாதிப்பு - இந்தியாவில் கரோனா நிலவரம்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 26 ஆயிரத்து 964 பாதிப்பும், 383 உயிரிழப்பும் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19
COVID-19

By

Published : Sep 22, 2021, 10:44 AM IST

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 26 ஆயிரத்து 964 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 383 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் தற்போது சிகிச்சைப் பெற்றுவருவோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்து ஆயிரத்து 989 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 45 ஆயிரத்து 768ஆகவும் உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை கரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 27 லட்சத்து 83 ஆயிரத்து 741 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 15 லட்சத்து 92 ஆயிரத்து 395 பேருக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், 81 கோடியே 85 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 96 லட்சத்து 46 ஆயிரத்துக்கு 778 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:முக்கியச் சந்திப்புகளை எதிர்நோக்கி அமெரிக்கா செல்லும் மோடி!

ABOUT THE AUTHOR

...view details