மும்பை:இந்தியாவில் தற்போது கரோனா தொற்றின் இரண்டாம் அலை தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. இது மகாராஷ்டிரா மாநிலத்தில் தீவிர பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.
அங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களுக்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதையடுத்து, நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் சிறப்பு சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மத்திய ரயில்வே மூலம் அறிமுகப்படுத்தியுள்ள ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற டேங்கர் ரயிலானது ஏழு காலி டேங்கர்களுடன் மும்பையிலிருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு விரைந்தது.