தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அனுமதி மறுத்த 9 மருத்துவமனைகள்: ஆம்புலன்ஸில் உயிரிழந்த இளம்பெண்! - corona death

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளம்பெண், சிகிச்சைக்காக சென்ற ஒன்பது மருத்துவமனைகளிலும் அனுமதி மறுக்கப்பட்டதால் உயிரிழந்தார்.

corona death
கரோனா உயிரிழப்பு

By

Published : May 17, 2021, 11:49 AM IST

புவனேஸ்வர்: திருமணமாகி 20 நாட்களே ஆன இளம்பெண் கரோனா தொற்றால் உயிரிழந்தார்.

ஒடிசா மாநிலத்தில் ஸ்வர்ணலதா பால் (25) என்ற இளம்பெண் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதியன்று கோர்தா மாவட்டத்தின் இந்தோலகுசியாரி கிராமத்தைச் சேர்ந்த பிஷ்ணு சரண் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், அந்த பெண் சில நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (மே15) அவரது உடல்நிலை மோசமாகி சுவாசப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. உடனே அவரது குடும்பத்தினர் பாலிபட்னா சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் அங்கிருந்த மருத்துவர்களும், ஊழியர்களும் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அங்கு சென்ற பிறகு, அங்கிருந்த மருத்துவர்கள் அவரை கட்டாக்கிலுள்ள எஸ்.சி.பி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

அப்போது அப்பெண்ணின் சூழ்நிலை மிகவும் மோசமானதால், அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர். அந்த நேரத்தில் அப்பெண்ணின் ஆக்ஸிஜன் அளவு 26 விழுக்காடாக குறைந்துள்ளது. பின்னர் வேறு வழியில்லாமல் மீண்டும் சுகாதார மையத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.

அந்த பெண்ணை அங்கே அனுமதிக்க மறுத்ததால் பதற்றம் நிலவியது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அப்பெண்ணின் உறவினரிடம் அவரை தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

பின்னர், உடனே தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பின்பு அவரை அங்கு அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் ஆம்புலன்ஸில் இருந்த ஸ்வர்ணலதா பால் உயிரிழந்தார். இச்சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நடிகர் நிதிஷ் வீரா கரோனா தொற்றால் காலமானார்

ABOUT THE AUTHOR

...view details