தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆகஸ்டில் கரோனா தலைதூக்கும் - ஐஐடி ஆய்வில் அதிர்ச்சித் தகவல் - ஆகஸ்ட் மாதத்தில் கரோனா தலைதூக்கும்

வரும் நாள்களில் (ஆகஸ்ட் நடுவில்) இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கும் என ஐஐடி ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.

COVID-19 cases
COVID-19 cases

By

Published : Aug 2, 2021, 12:43 PM IST

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை ஓய்ந்து, பொதுமுடக்கம் தளர்வில் உள்ளன. இருப்பினும் கேரளா உள்ளிட்ட சில பகுதிகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், வரும் நாள்களில் கரோனா பாதிப்பு எவ்வாறு இருக்கும் என ஐஐடி கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களான வித்யாசாகர், மனீந்திரா அகர்வால் ஆகியோர் ஆய்வு நடத்தி அதன் விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, ஆகஸ்ட் மாத மத்தியில் இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கும் எனவும், அதேவேளை இரண்டாம் அலை அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

விழாக்கள், சந்தைகளில் மக்கள் கூடும்போது கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படாததே பாதிப்பு அதிகரிக்கக் காரணம் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் கோவிட்-19 தினசரி பாதிப்பு சராசரியாக 40 ஆயிரமாக உள்ளது. இந்நிலையில், தொற்று எண்ணிக்கை அதிகம் காணப்படும் கேரளா, மகாராஷ்டிரா, வடகிழக்கு மாநிலங்களில் கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:இந்தியா திரும்பியதும் பிரதமருடன் ஐஸ்கிரீம் சாப்பிடவுள்ள பி.வி. சிந்து

ABOUT THE AUTHOR

...view details