தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவில் ஜெட் வேகத்தில் பரவும் கரோனா... ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு பாதிப்பு! - கரோனா மூன்றாம் அலை

கேரள மாநிலத்தில் நேற்று (ஆகஸ்ட்.25) மட்டும்  31 ஆயிரத்து 445 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Aug 26, 2021, 12:50 PM IST

இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக தினசரி கரோனா பாதிப்புகள் 30 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரத்திற்கு இடையில் பதிவாகி வருகிறது.

இதனிடையே நேற்று (ஆக.25) கேரள மாநிலத்தில் மட்டும் 31 ஆயிரத்து 445 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 லட்சத்து 83 ஆயிரத்து 429ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் தொற்றால் நேற்று (ஆக.25) மாநிலத்தில் 215 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 19 லட்சத்து 972ஆக உள்ளது. மேலும் 20 ஆயிரத்து 271 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்து 92 ஆயிரத்து 628ஆக உள்ளது.

ஓணம் பண்டிகை காரணமாகக் கேரள மாநில அரசு பல்வேறு தளர்வுகள் வழங்கிய நிலையில், மீண்டும் தொற்று அங்கு வேகமாகப் பரவி வருகிறது.

கரோனா மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் மீண்டும் கேரளா மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்க அம்மாநில அரசு முன்னதாக முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details