டெல்லி : இந்தியாவில் இன்று புதிதாக 38,617 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 89,12,907ஆக அதிகரித்துள்ளது.
தற்போதுவரை நாடு முழுவதும் 83,35,110 பேர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 4,46,805 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதேபோல் நாட்டில் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,30,993ஆக உள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தகவலின்படி, நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை விகிதம் 93.52 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.47 சதவிகிதமாக உள்ளது.