தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குழந்தைகளுக்கு செப்டம்பர் மாதத்தில் தடுப்பூசி!

குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசி செப்டம்பர் மாதம் முதல் செலுத்த வாய்ப்புள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர் ரண்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

COVAXIN trial
தடுப்பூசி

By

Published : Jul 24, 2021, 5:31 PM IST

குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை முடிவுகள் செப்டம்பரில் வெளியாகும் என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவர் ரண்தீப் குலேரியா கூறுகையில், " குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியின் பரிசோதனை கடைசிக்கட்டத்தில் உள்ளது. செப்டம்பரில் முடிவுகள் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு செப்டம்பரில் தடுப்பூசி

அவ்வாறு முடிவுகள் வெளியானால், ஓரிரு நாள்களிலோ அல்லது செப்டம்பர் மாதத்திலோ குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், செப்டம்பர் மாதத்திலிருந்து 2 முதல் 17 வயதுவரை கொண்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வாய்ப்புள்ளது. எனத் தெரிவித்தார்.

ZyCov-D கரோனா தடுப்பூசி

மேலும், ZyCov-D கரோனா தடுப்பூசியும், ஜைடஸ் காடிலா, தயாரித்த கோவிட்-19 தடுப்பூசி அவசர கால பயன்பாட்டிற்கு உபயோகிக்க ஜைடஸ் காடிலா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. அவர்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசி தரவையும் சமர்ப்பித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா

மூன்று கட்டங்களாக குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனை

கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்கி பரிசோதிக்கும் சோதனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஜூன் 7ஆம் தேதி தொடங்கியது. குழந்தைகளுக்கு மூன்று கட்டங்களாக சோதனை நடைபெறுகிறது.

முதலில் 12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, 6 முதல் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு நடைபெற்றது. தற்போது, 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:சி.ஐ.எஸ்.சி.இ: 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details