டெல்லி: ஹைதராபாத்தை தளமாகக் கொண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் (ஐசிஎம்ஆர்) இணைந்து பாரத் பயோடெக் லிமிடெட் உருவாக்கிவரும் கோவாக்சின் தடுப்பூசி வரும் ஆண்டின் தொடக்கத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக பேசிய எய்ம்ஸ் தலைமை ஆய்வாளர் சஞ்சய் ராய், "வரும் ஆண்டின் தொடக்கத்தில் அல்லது பிப்ரவரி மாத இறுதிக்குள் கோவாக்சின் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்தத் தடுப்பூசி 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் உள்நாட்டுச் சந்தை விற்பனையில் முன்னணியில் இருக்கும். அடுத்த மாதம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சோதனைகள் தொடங்கப்படவுள்ளன.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தயாரித்துவரும் கோவிஷீல்டு தடுப்பூசி மூன்றாம்கட்ட பரிசோதனையில் உள்ளது. அந்தத் தடுப்பூசி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பூசியை 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பரிசோதித்துள்ளனர்.