இது குறித்து ஐசிஎம்ஆர் வெளியிட்ட ஆய்வில், "உடலில் இருக்கும் ஆன்டிபாடிகள், முழுவதுமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், கரோனா தொற்றில் இருந்து குணமானவர்கள் தடுப்பூசி செலுத்திய பிறகு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மதிப்பீடு செய்தோம். இதில் டெல்டா வகை கரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பரவிய டெல்டா வகை கரோனா தொற்று அதிகளவில் பரவி இந்தியாவில் இரண்டாம் அலை ஏற்பட வித்திட்டது. இந்த கோவாக்சின் தடுப்பூசி டெல்டா வகை கரோனா தொற்றில் இருந்து 65.2 விழுக்காடு பாதுகாப்பு தருகிறது. இதனையடுத்து டெல்டா வகை கரோனா தொற்று டெல்டா AY.1, AY.2, AY.3 என மூன்று திரிபுகளாக உருமாறியது.