இந்தியாவில் பயன்பட்டில் உள்ள கரோனா தடுப்பூசிகளின் பாதுகாப்புத் தன்மை குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் பல்ராம் பார்க்வா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,இதுவரை 13 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் 1.1 கோடி பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 93 லட்சத்து 56 ஆயிரத்து 436 பேருக்கு முதல் டோஸூம், 17 லட்சத்து 37 ஆயிரத்து 178 பேருக்கு 2வது டோஸூம் செலுத்தப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசியில் முதல் டோஸ் போட்ட 93 லட்சம் பேரில், 4 ஆயிரத்து 208 (0.04 %) பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் போட்டவர்களில் 695 (0.04 சதவீதம்) பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
கோவிஷீல்ட் தடுப்பூசி இதுவரை 11 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. முதல் டோஸ் 10 கோடியே 03 லட்சத்து 02 ஆயிரத்து 745 பேருக்கும், இரண்டாவது டோஸ் ஒரு கோடியே 57 லட்சத்து 32 ஆயிரத்து 754 பேருக்கும் போடப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் போட்டவர்களில் 17 ஆயிரத்து 145 (0.02 சதவீதம்) பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.