தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போதைப்பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட்ட பாரதி சிங், அவரது கணவருக்கு பிணை வழங்கல்! - national news in tamil

போதைப்பொருள் வழக்கில் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட நகைச்சுவை நடிகர் பாரதி சிங், அவரது கணவர் ஹராஸுக்கு மும்பை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

பாரதி சிங் போதைப்பொருள் வழக்கு
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பாரதி சிங், அவரது கணவருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

By

Published : Nov 23, 2020, 5:04 PM IST

மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்குப் பின்பு, பாலிவுட் நடிகர்களுக்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரித்துவருகிறது. இதுதொடர்பாக, சுஷாந்த் சிங்கின் காதலி உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நகைச்சுவை நடிகர் பாரதி சிங், வீட்டில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது அவரது வீட்டிலிருந்த சிறிய அளவில் கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை, டிசம்பர் 4ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து இவர்கள் இருவரும் பிணை கோரி மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, பாரதி சிங், ஹராஸ் தரப்பு வழக்கறிஞர், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்கத் தேவையில்லை என்றும் சனிக்கிழமையன்றே அதிக நேரம் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றும் வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது வேறு எந்தக் குற்ற வழக்குகள் இல்லாததாலும், அவர்கள் தலைமறைவு ஆவதற்கான வாய்ப்புகள் இல்லாததாலும் அவர்களுக்குப் பிணை வழங்குவதாக உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பாலிவுட் நகைச்சுவை நடிகர் பாரதி சிங் கைது!

ABOUT THE AUTHOR

...view details