தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கந்தாரா ’வராஹ ரூபம்’ பாடலுக்கு தடை விதித்து கேரள நீதிமன்றம் அதிரடி

கன்னடத்தில் வெளியான கந்தாரா படத்தில் இடம்பெற்றுள்ள வராஹ ரூபம் எனும் பாடலுக்கு கேரள நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கந்தாரா ’வராஹ ரூபம்’ பாடல் சர்ச்சை
கந்தாரா ’வராஹ ரூபம்’ பாடல் சர்ச்சை

By

Published : Oct 29, 2022, 10:19 PM IST

கோழிக்கோடு:கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற காந்தாரா திரைப்படத்தில் 'வராஹ ரூபம்' பாடலை ஒளிபரப்ப கோழிக்கோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பிரபல மலையாள ராக் இசைக்குழுவான 'தாய்க்குடம் பிரிட்ஜ்' இசைக்குழுவின் பாடலை திரைப்பட தயாரிப்பாளர்கள் காப்பியடித்ததாக குற்றம் சாட்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதற்கு தீர்பளித்த கோழிக்கோடு நீதிமன்றம், வராஹ ரூபம் பாடலை அனுமதியின்றி திரையரங்குகளிலோ, மற்ற தளங்களிலோ ஒளிபரப்ப கூடாது என்று படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக 'வராஹ ரூபம்' பாடல் 2015ஆம் ஆண்டு தாங்கள் வெளியிட்ட இசையமைப்பான 'நவரசா' வின் நகல் என்று தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு குற்றம் சாட்டி தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில் தற்போது நீதிமன்றம் இந்த அபாடலுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:பாலிவுட்டில் களமிறங்கும் நடிகர் மஹத்!

ABOUT THE AUTHOR

...view details