தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை! - காண்டகர் கொலை சம்பவம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை கொலை செய்த ஓட்டுநருக்கு மரண தண்டனை விதித்து டெல்லி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

court
court

By

Published : Aug 1, 2022, 8:43 PM IST

டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் காண்டகர் கோட்வாலியைச் சேர்ந்த சதீஷ் சந்திர கோயல் என்ற தொழிலதிபர் வீட்டில் ஓட்டுநராக பணிபுரிந்த ராகுல்வர்மா, கடந்த 2013ஆம் ஆண்டு சதீஷ் சந்திர கோயல் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை கொடூரமாக கொலை செய்தார்.

வீட்டுக்குள் புகுந்து ஏழு பேரையும் ஆயுதங்களால் தாக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தார். முன்னதாக சதீஷின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த நான்கரை லட்சம் ரூபாய் பணத்தை திருடியதாக ராகுல் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்த கொலை சம்பவத்தில் சதீஷின் வீட்டில் கிடைத்த தடயங்களை வைத்து, ராகுலை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஆகஸ்ட் 1) ராகுலுக்கு டெல்லி மாவட்ட நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.

இதையும் படிங்க:ஜபல்பூர் மருத்துவமனை தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details