தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாடி டெவலப்புக்கு சப்ளிமெண்ட்ஸ் கேட்ட சுஷில்: நீதிமன்றம் அசத்தல் பதில்! - சுஷில் கைது

டெல்லி: தனிப்பட்ட விருப்பத்திற்காகக் கேட்கும் உணவுகளையும், பொருள்களையும் நிச்சயம் தர அனுமதி அளிக்க முடியாது என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி
சுஷில் குமார்

By

Published : Jun 10, 2021, 7:07 AM IST

சக வீரரைக் கொலைசெய்த வழக்கில், கைதாகி சிறையிலிருக்கும் மல்யுத்த வீரர் சுஷில் குமார், டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றைச் செய்திருந்தார்.

அந்த மனுவில், "மல்யுத்த போட்டிக்காகத் தயாராகவிருப்பதால், ஒமேகா 3 காப்ஸ்யூல்கள், ஒர்க்அவுட் சப்ளிமெண்ட்ஸ், மல்டிவைட்டமின் மாத்திரைகள் வேண்டும் என்றும், உடற்பயிற்சி பேண்ட்(exercise bands) வேண்டும்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்வீர் சிங் லம்பா, "மனுதாரர் கேட்டிருக்கும் சிறப்பு உணவுகள், உடற்பயிற்சி சாதனங்கள் அனைத்துமே சொந்த விருப்பத்திற்காகவே கேட்கப்பட்டுள்ளது.

அவருக்கு எவ்விதமான உடல்ரீதியான பாதிப்பு இல்லை. அத்தியாவசிய தேவை இல்லாததை, நிச்சயம் பரிந்துரைக்க முடியாது என்று கூறி கோரிக்கை மனுவை நிராகரித்தார்.

தற்போது, டெல்லியின் மண்டோலி (Mandoli) சிறையில் மல்யுத்த வீரர் ஒரு தனி அறையில் வைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக, அவர் யாரையும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details