ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசுக்கு இடையே முரண்பட்ட போக்கு நிலவிவருகிறது.
வரும் பிப்ரவரி மாதம் அங்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாயத்து ராஜ் துறையின் தலைமை செயலர் கோபால கிருஷ்ணா திவேதி ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான அரசு வழக்கறிஞர், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில அரசுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் இதை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.