ஒடிசாவில் கணவன், மனைவி, மகன் உள்ளிட்டோருக்கு கோவிட்-19 தொற்று உறுதியான நிலையில், (பாசிட்டிவ்) கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
ஒடிசா: கரோனா தொற்றால் தம்பதி தற்கொலை! - ஒடிசா
நாயகர்ஹ்: ஒடிசாவில் கரோனா தொற்று உறுதியானதால் மன அழுத்தத்துடன் இருந்த தம்பதி தற்கொலை செய்துகொண்டனர்.
அவர்களது மகனுக்கும் கோவிட்-19 சோதனையில் தொற்று உறுதியானதால் பூரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இதனையடுத்து தம்பதியினர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டபோது தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
கரோனா தொற்று உறுதியானதால் (பாசிட்டிவ்) மன அழுத்தத்தில் மூழ்கிய இவர்கள், தற்கொலை செய்யும் எண்ணத்தை மேற்கொண்டார்கள் என கிராம மக்கள் சந்தேகிக்கின்றனர். மேலும், வீட்டில் எந்தவொரு சத்தம் இல்லாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், உள்ளே சென்று பார்த்போது, அவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக்கண்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.