லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் பிறந்த குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்ற தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து ரூ.82,000 ரொக்கம் மீட்கப்பட்டது. மீரட்டில் உள்ள லாலா லஜபதி ராய் மருத்துவமனையில் பெண்ணொருவருக்கு நேற்றிரவு (டிசம்பர் 11) குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை பெண்ணின் கணவர் மற்றொரு தம்பதிக்கு ரூ. 1 லட்சத்துக்கு விற்றுள்ளார். இதனிடையே குழந்தையை காணவில்லை என்பதை அறிந்த செவிலியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்ற தம்பதி மீது வழக்குப்பதிவு
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்த குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்ற தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், போலீசார் சம்பவயிடத்துக்கு விரைந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தொடங்கினர். அப்போதே பெண்ணின் கணவர் குழந்தையை எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தை விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் குழந்தை மீட்கப்பட்டது. இதனிடையே அவர்களிடம் இருந்து ரூ.82,000 ரொக்கம் மீட்கப்பட்டது. இந்த விற்பனை பிரவித்த பெண்ணுக்கும் தெரிந்தே நடந்ததால் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:ஹோட்டலில் தற்கொலை முடிவு.. காதலன் உயிரிழப்பு.. காதலி பின்வாங்கல்..