லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலத்தில் முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நூபர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. இவருக்கு டெல்லியை சேர்ந்த பாஜக நிர்வாகி நவீன் குமார் ஆதரவு தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.
இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ, பிரக்யாராஜ், மொரதாபாத் உள்ளிட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) போராட்டங்கள் நடந்தன.
இந்த போராட்டத்தின்போது சிலர் போலீஸ் வாகங்களுக்கு தீ வைத்தும், கல் வீச்சில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் ஈடுபட்டதாக 304 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 2 பேருடைய வீடுகள் சட்ட விரோத கட்டப்பட்டுள்ளதாக கூறி ஜூன் 11ஆம் தேதி இடிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து நேற்று (ஜூன் 12) பிரயாக்ராஜில் உள்ள மேலும் ஒருவரது வீடு ஜேசிபி வாகனம் மூலம் இடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் தரப்பில், "இவரது வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாக கடந்த மே மாதமே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் காலி செய்யவில்லை. அதோடு, வீட்டை இடிப்பதற்கு முன்னதாக இவரது வீட்டிலிருந்து இரண்டு நாட்டுத் கைத்துப்பாக்கிகள், குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:இரு சமூகத்தினர் இடையே செங்கலால் வெடித்த மோதல்