புதுச்சேரி: வானரப்பேட்டை காளியம்மன் தோப்பு பகுதியில் ஆற்றைக் கடந்து செல்ல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இப்பாதையில் நேற்று (ஜூலை.04) இரவு, ரயில் பாதை அருகில் பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் வெளியே வந்து பார்த்த போது புகை மூட்டமாகக் காணப்பட்டது.
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த ஒதியஞ்சாலை காவல் துறையினர், அப்பகுதியைப் பார்வையிட்டு சோதனை நடத்தினர்.
இதில், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் சிலர் நாட்டு வெடிகுண்டு தயாரித்து சோதனை செய்து பார்த்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஆட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த சில ரவுடிகளை காவல் துறையினர் சந்தேகத்தில் பேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஜூலை 14 வரை பாம்பன் ரயில் பயணம் ரத்து!