புதுச்சேரி:புதுச்சேரி அருமாத்தபுரம் புது தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன், எலட்ரீசியனாகப் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு(நவ.30) இவரது வீட்டின் வெளியே அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் அக்கம்பக்கத்தினர் இது குறித்து வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உடன் வந்து தடயங்களைச் சேகரித்தனர்.