இந்திய கைத்தொழில் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட வெபினாரில் பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "ஆரம்பத்திலிருந்து இப்போதுவரை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்தியாவில் கரியமில வாயு வெளியேற்றம் என்பது வெறும் மூன்று விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருந்துள்ளது.
தற்போதுகூட 130 கோடி பேர் இருக்கும் நம் நாட்டிலிருந்து வெளியேறும் கரியமில வாயு வெறும் ஏழு விழுக்காடாக மட்டுமே உள்ளது. இந்தியா இதில் நிர்ணயத்த இலக்குகளைவிட அதிகமாகவே சாதித்துள்ளது. இது நாம் சொல்வதோடு நிறுத்திக்கொள்வதில்லை சொல்வதை செய்கிறோம் என்பதற்கு சாட்சியாக உள்ளது.
உலகின் மற்ற நாடுகள் தங்கள் வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டும் நிறைவேற்றிவிட்டு, மற்ற நாடுகள் தங்கள் இலக்குகளை அதிகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இதை நான் தவறான ஒரு அணுகுமுறையாகவே பார்க்கிறேன்.