மேற்கு வங்க சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் திருணாமூல், பாஜக, இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
மொத்தம் 108 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவடைந்த நிலையில், தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.