ஸ்ரீஹரிகோட்டா (ஆந்திரா):500 கிலோ எடையுள்ள, குறைந்த புவியின் சுற்றுவட்டப்பாதையில் செலுத்துவதற்காக, சிறிய செயற்கை கோளை ஏவக்கூடிய எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை (small satellite launch vehicle - SSLV) இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியாவின் இந்த புதிய ராக்கெட், சிறிய செயற்கை ரக கோள் ஏவு வாகனம்- D1 உடன் இன்று (ஆக. 7) காலை விண்ணில் பாய்கிறது. இதன் கவுண்டவுன், ராக்கெட் ஏவப்படுவதற்கு ஆறரை மணி நேரத்திற்கு முன்னதாக, இன்று அதிகாலை 2.26 மணிக்கு தொடங்கியது.
SSLV ராக்கெட்டின் நோக்கம் EOS-02 மற்றும் AzaadiSAT செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்துவதாகும். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் (SHAR) உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.18 மணிக்கு ராக்கெட்டை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்தப்பட்ட ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற திட்டத்தின்கீழ், 75 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளை இஸ்ரோ தேர்ந்தெடுத்தது. அவர்கள் ஒன்றிணைந்து AzaadiSAT செயற்கைக்கோளை தயாரித்தது குறிப்பிடத்தக்கது. பூமத்திய ரேகைக்கு 37 டிகிரி சாய்ந்த நிலையில் உள்ள பூமியின் சுற்றுப்பாதையில் இச்செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட உள்ளன. SSLV ராக்கெட் மினி, மைக்ரோ அல்லது நானோ செயற்கைக்கோள்களை (10 முதல் 500 கிலோ எடை) 500 கி.மீ., பிளானர் சுற்றுப்பாதைக்கு அனுப்பும் திறன் கொண்டது.
இந்த செயற்கை கோள் மூலம் பூமியின் புவி-சுற்றுச்சூழல் ஆய்வுகள், வனவியல், நீரியல், விவசாயம், மண் மற்றும் கடலோர ஆய்வுகளின் மூலம் அந்தந்த துறைகளுக்கு பயனளிக்கும் வகையில், வெப்ப முரண்பாடுகள் குறித்த உள்ளீடுகளை வழங்குவதே இதன் நோக்கமாகும். இதன் நேரலையை இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம். இதன் நேரலையைhttps://bit.ly/3SAJ0A6என்ற லிங்கில் காணலாம்.
இதையும் படிங்க:மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் அது தண்ணீருக்காக மட்டுமே - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் எச்சரிக்கை!