புதுச்சேரி: கடந்த 2009ஆம் ஆண்டு, காவல்துறையினருக்கு தலைக்கவசம் வழங்க ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் நடைபெற்றதாக சிபிஐக்கு புகார் சென்றது. இதனைத் தொடர்ந்து அப்புகாரை விசாரித்த சிபிஐ அலுவலர்கள் அப்போதைய கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், ஆய்வாளர் ரஹீம், உதவி ஆய்வாளர் டோம்னிக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
ஹெல்மெட் வாங்கியதில் ஊழல்: ஓய்வுபெற்ற எஸ்.பி., காவலர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை!
புதுச்சேரி காவல்துறையினருக்கு தலைக்கவசம் வழங்க ஒதுக்கிய நிதியில், ஊழல் செய்த ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டணை விதித்து, புதுச்சேரி தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி நீதிமன்றம்
இதுதொடர்பான வழக்கு, கடந்த 11 ஆண்டுகளாக புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று (டிச.23) தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட ராமச்சந்திரன், ரஹீம், மற்றும் டோம்னிக் ஆகியோருக்கு தலா ஓராண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தனபால் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:மக்களை கவர்ந்து வரும் கொல்கத்தா ட்ராம் வண்டிகள்