டெல்லி: நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை மத்திய அரசு "அம்ரித் மகோத்சவ்" என்ற பெயரில் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக "ஹர் கர் திரங்கா பிரசாரம்" நாடு முழுவதும் நடத்தப்படவுள்ளது. அதன்படி வரும் 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை, நாடு முழுவதும் ஒரு வாரத்திற்கு 72 கோடி மூவர்ணக்கொடிகள் ஏற்றப்படும். வரும் 13ஆம் தேதி முதல் அனைத்து வீடுகளிலும் கொடி ஏற்றவும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், தேசியக்கொடியை மரியாதையாக கையாள்வதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தேசியக்கொடியை கம்பத்திலிருந்து அவிழ்த்த பிறகு, கீழ்க்கண்ட படிகளில் அதனை மடிக்க வேண்டும்...
- முதலில் தேசியக்கொடியை கிடைமட்டமாக பிடிக்க வேண்டும்
- பின்னர் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிறப்பகுதிகளை, நடுவில் உள்ள வெள்ளை நிறப்பகுதியின் கீழ் வைத்து மடக்க வேண்டும்
- அதேபோல் அசோகச்சக்கரத்திற்குப் பக்கவாட்டில் உள்ள வெள்ளை நிறப்பகுதிகளையும் மடக்க வேண்டும்
- பிறகு தேசியக்கொடியை உள்ளங்கைகளில் வைத்து எடுத்துச்செல்ல வேண்டும்