புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி இன்று (டிச.7) காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "டெல்லியில் போராடும் வடமாநில விவசாயிகளுக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவு உள்ளது. பாஜகவின் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து நாளை(டிச.8) நடைபெறும் பாரத் பந்திற்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரியில் இப்போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்கின்றன. புயல் பாதிப்பால் ரூ.400 கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு நிதியை குறைக்காமல் வழங்க வேண்டும்.