தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 16, 2021, 11:28 AM IST

ETV Bharat / bharat

புதுச்சேரியில் 100 இடங்களில் கரோனா தடுப்பூசித் திருவிழா!

புதுச்சேரி: 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 100இடங்களில் கரோனா தடுப்பூசி திருவிழா
புதுச்சேரியில் 100இடங்களில் கரோனா தடுப்பூசி திருவிழா

புதுச்சேரியில் இதுவரை 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை செயலர் அருண் தெரிவித்துள்ளது. இது குறித்து, புதுவை மாநில சுகாதாரத் துறைச் செயலர் டாக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

"புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை அதிகப்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது இந்த நோயைக் கட்டுக்குள் கொண்டுவர புதுச்சேரியில் சுமார் 100 இடங்களில் கரோனா தடுப்பூசித் திருவிழாவை மாநில நிர்வாகம் நடத்திவருகிறது. முதலில் நான்கு நாள்கள் மட்டுமே நடத்த முடிவு செய்திருந்த நிலையில், தற்போது கரோனா தடுப்பூசி திருவிழாவை வரும் 18ஆம் தேதிவரை நடத்த முடிவுசெய்துள்ளது. இதில் 45 வயதுக்கு மேற்பட்டோர் அதிகளவில் பங்கேற்று கரோனா தடுப்பூசியைச் செலுத்திவருகின்றனர்.

குறிப்பாக, கடந்த ஐந்து நாள்களில் புதுச்சேரி முழுவதும் சுமார் 53 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் கரோனா தடுப்பூசியை ஆர்வமாக எடுத்துக்கொண்டுள்ளனர். எனவே தொற்று நோய் சார்ந்த அறிகுறிகள் தெரிந்தால் பொதுமக்கள் அவற்றை அலட்சியம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என மாநில சுகாதாரத் துறைச் செயலர் மருத்துவர் அருண் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details