தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! - கரோனா பரிசோதனை சான்று

திருப்பதியில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு மீண்டும் கொரோனா தடுப்பூசி சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

By

Published : Dec 24, 2022, 4:32 PM IST

திருப்பதி: உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். தற்போது வைகுந்த ஏகாதசி தொடங்கியுள்ளதால், வைகுண்ட நுழைவு வாயில் திறக்கப்பட்டு 11-ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில், சீனாவில் புதிய வகை கரோனா பரவல் உலக அளவில் அதிகரித்து வருவதால் இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக திருமலை தேவஸ்தானம் கரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்த தொடங்கியுள்ளது.

அதன்படி, ஜனவரி 1 முதல் 11 வரை சிறப்பு தரிசனம் செய்ய முன்பதிவு செய்வோருக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதேபோல் ரூ.300 டிக்கெட் பெரும் பக்தர்கள் தடுப்பூசி சான்றிதழ் கொடுப்பது அவசியம், இரண்டு தவணை தடுப்பூசி போடாதவர்கள் கரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை தரிசனத்துக்கு வரும்போது அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:அதிமுகவில் புதிய அணியா? சி.வி.சண்முகம் செயலால் அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details