தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

426 மாணவர்களுக்கு கரோனா... பள்ளிகளை மூட உத்தரவு...

ஒரு மாதத்தில் 426 மாணவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

corona test positive for students
corona test positive for students

By

Published : Oct 30, 2021, 3:17 PM IST

சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்பட்டுவருகின்றன. ஒரு மாதம் முடிந்த நிலையில், காங்ரா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 426 மாணவர்கள், 49 பணியாளர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், அக்டோபர் 31ஆம் முதல் பள்ளிகள் தொடர்ந்து மூடப்படும் என மாவட்டக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே மத்திய பிரதேச மாநிலத்தில் உருமாற்றமடைந்த ஏஒய்.4.2(AY.4.2) என்ற கரோனா வைரஸ் பரவியுள்ளது. இதையடுத்து மகாராஷ்டிராவிலும், பெங்களூருவிலும் பரவியுள்ளது.

ஏஒய்.4.2 வைரஸ், கரோனாவைவிட 6 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இதனை கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பில் மாநில அரசுகள் மற பரிசீலனையில் ஈடுபடலாம் என்று கூறப்படுகின்றன.

இதையும் படிங்க:‘பள்ளிக்கு வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம்’ - முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details