டெல்லி: நாடு முழுவதும் கரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துவது, ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்துகள் இருப்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் செங்கல்பட்டில் 11 பேர் உயிரிழந்த பரிதாபம்