உத்தரப்பிரதேசம்:உத்தரப்பிரதேச மாநிலம் பார்த்தபாகர் மாவட்டத்தில் உள்ள சுக்லாப்பூர் கிராமத்தில், கரோனா மாதா கோயிலை அவ்வூர் மக்கள் அமைத்துள்ளனர். இதுதொடர்பாக அவ்வூர் வாசிகள் கூறுகையில், ஆயிரக்கணக்கான மக்கள் கரோனா தொற்றினால் உயிரிழந்து வருவதை கண்டபின் கடவுளை வணங்குவது மக்களுக்கு அமைதியைத் தரும் என்று நம்பினோம். அதனடிப்படையில் நன்கொடை பெற்று வேப்பமரத்தின் அடியில் இந்த கரோனா மாதா கோயிலை அமைத்துளளோம்" என்கின்றனர்.
சுக்லாப்பூரில் அமைக்கப்பட்டுள்ள கரோனா மாதா கோயிலில், முகக்கவசமும் அணிந்த நிலையில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அக்கோயிலின் சுவரில், 'சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்', 'கைகளைகழுவுங்கள்' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
பிளேக் மாரியம்மன் கோயில்